ADDED : டிச 13, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.
நிர்வாகி ஆனந்தன் வரவேற்றார்.
செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் பெருமாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். திருநகர் பாரதி முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பேராசிரியை குணவதி உணவு வழங்கினார்.
அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் மாத விடாய் காலங்களில் சிறப்பு விடுப்பளிக்கவேண்டும். அரசு உதவிபெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கும் உயர் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் ஜெகநாதன், சண்முகசுந்தரம், சந்திரன், விஜயன், லட்சுமணன், ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெருமாள் நன்றி கூறினார்.

