நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது.
மாதாந்திர அறிக்கையை செயலாளர் ஸ்ரீ கண்டனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஆதிசிவனும் வாசித்தனர்.
செயல் தலைவர் மணி, கவுரவ தலைவர் துரைப்பாண்டியன், துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்டோர் சங்க வளர்ச்சி, 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, 70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டவுன் பஸ்சில் இலவச பயணம் மேற்கொள்வது குறித்து பேசினர். ஆலோசகர்கள் பாண்டி, கணபதி நன்றி கூறினர்.