ADDED : செப் 09, 2026 06:03 PM
மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக கிளையின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் பேராசிரியர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அனார்கலி வரவேற்றார். பேராசிரியர் ராஜேந்திரன், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சந்திரன் ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.
மாநில சங்க நடவடிக்கை குறித்து பேராசிரியர் பெரியதம்பியும், கோரிக்கைகள் குறித்து சங்க பொறுப்பாளர் பார்த்தசாரதியும் பேசினர். மேலும் அகில இந்திய ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சங்க துணைத் தலைவர் மனோகரன் பங்கேற்றனர். பேராசிரியர் சந்திரன் நன்றி கூறினார். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தை ரூ.1.5 லட்சமாக வழங்க வேண்டும். 70, 75 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
