ADDED : செப் 09, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
மூலநாதசுவாமி கோயிலில் கோட்டை விநாயகர் சன்னதியில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டன. கிருஷ்ணமூர்த்தி யாக பூஜைகள் செய்தார். மாப்பிள்ளை வீட்டாராக பாலாஜி பட்டர், பெண் வீட்டாராக கிருஷ்ணஹரி பட்டர் விழாவை நடத்தினர். வேங்கடரமணன், சங்கரன், விஸ்வநாதன் குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர்.
ருக்மணி சத்யபாமாவுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. ராமகிருஷ்ணன், ராமன், ஆலடி முன்னிலை வகித்தனர். அன்னதானம், திருமாங்கல்யம், மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. தண்டபாணி, கருப்பத்தேவன், ஆதிபகவன், சுந்தர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
