தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்தில் மயில்கள் பாதுகாப்பிடம் அமையுமா

குன்றத்தில் மயில்கள் பாதுகாப்பிடம் அமையுமா

குன்றத்தில் மயில்கள் பாதுகாப்பிடம் அமையுமா


ADDED : செப் 09, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றத்தில் மயில்கள் பாதுகாப்பிடம் அமைக்க நடடிக்கை எடுக்க வேண்டும்’’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையின்பின்புறம் தென்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் 500 க்கும் மேற்பட்ட வண்ண மயில்கள், ஐந்துக்கும் மேற்பட்ட வெள்ளை அபூர்வமான மயில்கள் இருந்தன. காலை, மாலையில் சமூக ஆர்வலர்கள், மலையை சுற்றிவரும் பக்தர்கள் சோளம், கம்பு உட்பட நவதானியங்களை மயில்களுக்கு உணவாக கொடுத்தனர்.

மற்ற நேரங்களில் அப்பகுதியில் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. மயில்களுக்கு உணவு கொடுப்போரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே உணவுக்காக வயல் வெளியில் கிடைப்பவற்றை உண்கின்றன. தற்போது விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருவதால், உணவைத் தேடி அலைந்து, கிடைக்குமிடங்களில் தங்குகின்றன.

தற்போது 100 க்கும் குறைவான மயில்கள், ஒரு வெள்ளை மயில் மட்டுமே உள்ளன. அவை மலையின் பொந்துகளிலும், மரங்களிலும் தங்குகின்றன. பாதுகாப்பு இல்லாததால் தெரு நாய்கள் மயில்களின் இருப்பிடம் சென்று முட்டைகளை உண்கின்றன. இதனால் மயிலின் இனப் பெருக்கம் தடைபடுகிறது. உணவுக்காக கிரிவலம் ரோடு பகுதிக்கு வரும் சில மயில்களை தெரு நாய்கள் கொன்று விடுகின்றன. வாகனங்களில் அடிபட்டும் சில இறக்கின்றன.

கல்வெட்டு, குகைக்கோயில், மலை அடிவார பகுதிகளில் அதிகாலை, மேகமூட்ட நேரத்தில் மயில்கள் தோகை விரித்தாடுகி்ன்றன. அதைக் காண ஏராளமானோர் கூடுகின்றனர். எனவே, தென்பரங்குன்றத்தில் மயில்களுக்கு உணவு, தண்ணீர் வசதியுடன், பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us