நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : வன்னிவேலம்பட்டி அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கச் செயலாளர் ஜான்சிராணி தலைமை வகித்தார். கல்விக் குழுச் செயலாளர் சுப்புராஜ், கிராம குழு பாஸ்கரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் செந்தில் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தர உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.