/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் உலக முதலீட்டாளர் மாநாடு * வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு
/
மதுரையில் உலக முதலீட்டாளர் மாநாடு * வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு
மதுரையில் உலக முதலீட்டாளர் மாநாடு * வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு
மதுரையில் உலக முதலீட்டாளர் மாநாடு * வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 01, 2025 03:51 AM

மதுரை: மதுரையில் அடுத்த உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த வேண்டும்; மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில் தலைவர்கள், அரசு பிரதிநிதிகள், நிபுணர்களை ஒன்றாக இணைக்கும் நோக்கில் தமிழக அரசு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது. ஆனால் தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் சமச்சீராக இல்லை. தென் தமிழகத்தில் தொழில் பொருளாதார வளர்ச்சி பின்தங்கியுள்ளது. 2.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மதுரை உள்ளிட்ட 14 தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் இங்குள்ள 170க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்த நிலை உருவாக அடுத்தாண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாட்டை மதுரையில் நடத்தவேண்டும்.
2வது தலைநகராக்க வேண்டும்
அரசு அலுவலகங்கள் அனைத்தும் சென்னையில் தான் உள்ளன. சிறுதொழில் துவங்க வேண்டுமென்றாலும் சென்னை சென்று அனுமதி பெற நேரம் விரயமாவதுடன் செலவும் அதிகமாகிறது. சென்னையில் மக்கள் தொகைப் பெருக்கம், வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவித்தால் தென் தமிழகம் வளம் பெற வாய்ப்பு உண்டாகும் என்றார்.