ADDED : டிச 22, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர் : மேலுார் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி 11 கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று மேலூரில் முல்லைப்பெரியாறு ஒரு போக பாசன விவசாய சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நிர்வாகிகள் ரவி, குறிஞ்சி குமரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் டிச.,23, 24 ஆகிய இரு நாட்கள் ஒலிபெருக்கி மூலம் அனைத்து கிராமங்களுக்கும் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்த அறிவிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டிச., 25 மேலூரில் அனைத்து கிராம மக்களையும் ஒன்று திரட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.