ADDED : மார் 21, 2026 07:38 AM

திருமங்கலம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டிய நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகளால் விற்பனை குறைவாக நடந்தது.
தென்மாவட்டங்களிலேயே மிகப்பெரிய ஆட்டுச் சந்தையான இங்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சந்தை நடப்பது வழக்கம். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆடுகளை விற்க, வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாயின.
தேர்தல் நன்னடத்தை விதிகளால் குறைவு கடந்தாண்டை விட இந்தாண்டு விலை அதிகமாக இருந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகளால் வியாபாரிகள் அதிக பணத்தை கொண்டு வர முடியாமல் சந்தைக்கு வரவில்லை. இதனால் ஆடுகள் விற்பனை குறைந்தது.
கடந்தாண்டு ரூ. 6 கோடிக்கு மேல் விற்பனை நடந்த நிலையில் இந்தாண்டு ரூ. 3 கோடி வரை மட்டுமே விற்பனை நடந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

