sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கிராமங்களைவிட நகரங்களில் பெண்கள் ஓட்டளிப்பது குறைவு விழிப்புணர்வு நிகழ்வில் கலெக்டர் ஆதங்கம்

/

 கிராமங்களைவிட நகரங்களில் பெண்கள் ஓட்டளிப்பது குறைவு விழிப்புணர்வு நிகழ்வில் கலெக்டர் ஆதங்கம்

 கிராமங்களைவிட நகரங்களில் பெண்கள் ஓட்டளிப்பது குறைவு விழிப்புணர்வு நிகழ்வில் கலெக்டர் ஆதங்கம்

 கிராமங்களைவிட நகரங்களில் பெண்கள் ஓட்டளிப்பது குறைவு விழிப்புணர்வு நிகழ்வில் கலெக்டர் ஆதங்கம்


ADDED : மார் 21, 2026 07:39 AM

Google News

ADDED : மார் 21, 2026 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கிராமங்களைவிட, நகர பெண்கள் ஓட்டளிப்பது குறைவாக உள்ளது. நுாறு சதவீதம் ஓட்டளிப்பதற்காக தினமும் ஊர்வலம், மெகந்தி வரைவது என தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கலெக்டர் பிரவீன்குமார் பேசினார்.

தேர்தலையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது. கலெக்டர் துவக்கி வைத்தார். வாகனங்களில் 'நுாறு சதவீதம் ஓட்டளிப்போம்' என்ற ஸ்டிக்கர் ஒட்டியும், 'என் ஓட்டு என் உரிமை' என்ற பதாகையுடனும் பெண்கள் பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., அன்பழகன், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் வானதி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஊரக பகுதிகள், ஒன்றியங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். அனைவரும் தங்கள் கைகளில் விழிப்புணர்வுக்காக மெகந்தி வரைந்து இருந்தனர். இவர்களிடம் கலெக்டர், ''தேர்தலில் கிராமப்பகுதிகளில் பெண்கள் ஓட்டளிப்பது அதிகமாக உள்ளது. அதேசமயம் நகர பகுதியில் பெண்கள் ஓட்டளிப்பது குறைவாக உள்ளது. எனவே அனைவரும் பங்கேற்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள்'' என்றார்.

உசிலம்பட்டி 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம்' என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் வருவாய்த் துறையினர், கிராமியக் கலைஞர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் உசிலம்பட்டியில் நடத்தினர்.

உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கார்த்திகேயன், செல்லப்பாண்டியன் தலைமையில் உதவி தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us