ADDED : மே 31, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: பக்ரீத் பண்டிகைக்கு ஒருவாரமே உள்ள நிலையில் நேற்று காலை திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட சிறு ஆடுகள் முதல் பெரிய அளவிலான கிடா ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
சிறு ஆடுகள் ரூ. 15 ஆயிரத்திற்கும் மிகாமலும் பெரிய ஆடுகள் ரூ. 40 ஆயிரத்திற்கு மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததால் விலை அதிகம் எனக்கூறி பலர் ஆடுகளை வாங்குவதற்கு தயங்கினர்.