/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளிக்காக திருமங்கலத்தில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை தீபாவளியையொட்டி 'சுறுசுறு' வியாபாரம்

ADDED : அக் 18, 2025 05:29 AM

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. விலை அதிகரித்து இருந்த போதும் பொதுமக்கள், வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ரூ.7 கோடிக்கு விற்பனை நடந்தது.
தென் மாவட்டங்களில் முக்கியமான திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும். அக்.,20ல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
இங்கு ஆடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பொதுமக்கள் சந்தை மற்றும் சந்தைக்கு அருகில் உள்ள பகுதிகளில் கூடினர்.
நேற்று அதிகாலை 3:00 மணி முதல் இச்சந்தை களை கட்டியது.
தற்போது ஆடுகளை வளர்ப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் ஆடுகளின் விலையும் அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு உயிருடன் ஒரு கிலோ ஆட்டின் விலைரூ. 600 முதல் 700 வரை இருந்த நிலையில் நேற்று ரூ. 800 முதல் 900 வரை விற்பனையாகின. இருந்தும் பரபரப்பாக நடந்த ஆடு விற்பனையில் ரூ. ஏழு கோடி மதிப்பிற்கு விற்பனையாகின.