/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
த.வெ.க., நிர்வாகிக்கு ஜாமின் அனுமதி
/
த.வெ.க., நிர்வாகிக்கு ஜாமின் அனுமதி
ADDED : அக் 18, 2025 05:28 AM
மதுரை: கரூர் த.வெ.க.,கூட்டத்தில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் அக்கட்சி நிர்வாகிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27ல் த.வெ.க.,பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதை தாக்கியதாக சேலம் மாவட்டம் தென்னங்குடிபாளையம் வெங்கடேசன் (த.வெ.க.,நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்) மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கைதான அவர் உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சுபாஷ்பாபு,'தாமதமாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஒரே சம்பவத்திற்கு 2 வழக்குகள் பதிந்தது ஏற்புடையதல்ல. சம்பவத்திற்கும் மனுதாரருக்கும் தொடர்பில்லை. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என்றார். அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி,'ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீசில் மனுதாரர் ஒருவாரம் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.