ADDED : அக் 18, 2025 05:27 AM
தடை விதிப்பவர்களிடம் கேளுங்கள்: ராஷ்மிகா
தென்னிந்திய, ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளார் ராஷ்மிகா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவை புகழ்ந்தது உள்ளிட்ட சர்ச்சைகளால் கன்னட படங்களில் இவருக்கு வாய்ப்பில்லை. இதுபற்றி அவர் கூறும்போது, ''தொழில்முறை விமர்சனம் வரவேற்கத்தக்கது. ஆனால் தனிப்பட்ட அவதுாறுகள் தவறு. யார் எனக்கு தடை விதிக்கிறார்களோ அவர்களிடம் சென்று ஏன் தடை விதிக்கிறீர்கள் என கேளுங்கள்'' என்கிறார்.
நான் ஒரு 'கிளீன் ஸ்லேட்': மமிதா பைஜு
பிரதீப் ரங்கநாதன் உடன் மமிதா பைஜு நடித்துள்ள 'டியூட்' படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. பன் மொழிகளில் நடிப்பது பற்றி மமிதா கூறுகையில், ''அந்தந்த மொழிகளின் படப்பிடிப்புக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு ஒரு 'கிளீன் ஸ்லேட்' ஆகத்தான் செல்கிறேன். சூழலுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்கிறேன். உணவு, மொழி தவிர்த்து வேறு பிரச்னை எதுவும் இல்லை. எதையும் புரிந்து கொண்டு வேலை செய்தால் பிரச்னை வராது'' என்கிறார்.