/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அணைகளை புறக்கணிக்கும் தமிழக அரசு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
/
அணைகளை புறக்கணிக்கும் தமிழக அரசு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
அணைகளை புறக்கணிக்கும் தமிழக அரசு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
அணைகளை புறக்கணிக்கும் தமிழக அரசு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
ADDED : அக் 18, 2025 05:27 AM
மதுரை: 'வைகை அணை துார்வாருவது, முல்லைப்பெரியாறு அணையில் நீரை கூடுதலாக தேக்குவது, அணைகளை முறையாக பராமரிப்பது என எதற்கும் நிதி போதிய அளவு ஒதுக்காமல் தமிழக அரசு புறக்கணிக்கிறது,'' என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு மாநிலத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது :
தமிழகம் முழுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவெடுத்ததாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் டெல்டா பகுதியில் அரசாணைக்கு புறம்பாக ஓ.என்.ஜி.சி., விண்ணப்பம் செய்துள்ளது. அதை சுற்றுச் சூழல் துறை பரிசீலித்து வருகிறது. இப்படி எல்லாமே முரண்பாடாக உள்ளது.
அணையை கோட்டை விட்டது உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி 2016 க்கு முன்பாகவே முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி தமிழக அரசு சாதனை படைத்தது. 142 அடி வரை நீரை தேக்கியிருந்தால் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பாசனநீர் கிடைத்திருக்கும். பேரிடர் காலத்தில் மட்டும் தான் 'ரூல் கர்வ்' முறை பயன்படுத்த வேண்டும். இந்தாண்டில் சராசரி மழைநாளில் கூட 142 அடி வரை நீரைத் தேக்க கேரள அரசு அனுமதிக்கவில்லை. இதை தமிழக அரசும் தட்டிக்கேட்கவில்லை.
இதனால் வைகை அணையில் 67 அடிக்கு மேல் நீர் நிரம்பவில்லை என்பதை காட்டி 18ம் கால்வாய் உட்பட பல்வேறு நீர்ப்பாசனங்களுக்கு நீர் திறக்கவில்லை.
அணையில் 152 அடி வரை நீரை தேக்கி வைப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த வடகிழக்கு பருவமழை சீசனிலாவது 142 அடி வரையாவது நீரை தேக்கி வைக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி கூட முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு, பேபி அணை பலப்படுத்துவது போன்ற பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நெல் கொள்முதல் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது.
நெல் விற்ற பணத்தை விவசாயிகள் போராடித் தான் பெற முடிந்தது. நெல் கொள்முதல் செய்வதற்கு கோடவுன்கள் கட்டுவோம் என்று கூறியதற்காக 4 இடங்களில் மட்டும் கோடவுன்கள் கட்டியுள்ளது. ஆனால் ரூ.450 கோடியில் சென்னையில் கார் பந்தயம் நடத்தியுள் ளது என்றார்.