ADDED : ஜூன் 25, 2025 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : தமிழக சமூகநலத்துறை சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். சமூகநலத்துறை அலுவலர் காந்திமதி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற விதவைகளின் திருமணமாகாத மகள்களுக்கு 8 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தில் மேலும் பெண்கள் பிளஸ்2 முடித்திருந்தால் ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்திருந்தால் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்திருந்த 403 பெண்களுக்கு, அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் தங்க நாணயங்களை வழங்கினர். 'இந்தாண்டு வரை பதிவு செய்திருந்தவர்களுக்கு தங்கம் வழங்கப்பட்டுவிட்டது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.