ADDED : செப் 24, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
மதுரை: சி.பி.எஸ்.சி., குழும பள்ளி தடகளப் போட்டிகள் கிருஷ்ணகிரியில் நடந்தது.
இதில் மதுரை ராஜாக்கூர் அரைசர் சர்வதேச பள்ளி 8 ம் வகுப்பு மாணவர் சாய் ராகவ் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார். தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் எஸ்.டி. பப்ளிக் பள்ளியில் நடக்க உள்ள தேசியப் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். சேர்மன் அருணாச்சலம், முதன்மை நிர்வாக அதிகாரி செந்தில் ராஜா, முதல்வர் உதய பிரபா, இயக்குநர்கள் சுமதி, விஜய சிவசங்கர், பயிற்சியாளர் ஸ்ரீதர் பாராட்டினர்.
