தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : செப் 24, 2026 10:22 PM

ADDED : செப் 24, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 10:22 PM ADDED : செப் 24, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செப். 25

கோயில்

* கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.

* புரட்டாசி பொங்கல் விழா: மகேஸ்வரி அம்மன் கோயில், மறைமலை அடிகள் தெரு, சதாசிவ நகர், மதுரை, முளைப்பாரிக்கு மகளிர் குழு கும்மி அடித்தல், மாலை 6:30 மணி.

* மதுரவல்லித் தாயார் சந்தன காப்பு சேவை: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 6:30 மணி.

* புரட்டாசி 2வது வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* ரிஷிகள் காட்டும் வழி - புரட்டாசி சிறப்பு உபன்யாசம்: நிகழ்த்துபவர் - வேளுக்குடி ரங்கநாதன் சுவாமி, பிராமண கல்யாண மஹால், பழைய தபால் நிலைய ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:30 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பள்ளி, கல்லுாரி

* பைத்தான் மற்றும் ஏ.ஐ., - ஒரு ஆழமான தொழில்நுட்ப ஆய்வு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: ஐ.ஆர்.ஜி., இன்போடெக் மூத்த மேம்பாட்டு நிபுணர் பானுமதி, காலை 10:00 மணி, செயற்கை நுண்ணறிவு குறித்து சிறப்புரை: கியூஜிரா நிறுவனர் சாய்கீதா, காலை 10:30 மணி, போட்டித் தேர்வுகள் வகுப்பு தொடக்கவிழா சிறப்புரை: கல்லுாரி பொதுக்குழு உறுப்பினர் ருத்திரமூர்த்தி, டி.ஏ.எப்., கல்வி மைய நிர்வாக இயக்குநர் மாரியப்பன், மதியம் 2:30 மணி.

* கணினி துறையில் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: எச்.சி.எல்., டெக் குழு மேலாளர் கீர்த்தி, காலை 10:30 மணி.

* சுற்றுச்சூழல் நிர்வாகம், பொதுமக்களின் பங்கேற்பு குறித்து சிறப்புரை: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் ஆனந்த், காலை 9:10 மணி.

* கணினி அறிவியல் துறை, பீனிக்ஸ் சாப்டெக் இணைந்து நடத்தும் ஒருநாள் பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மூத்த மென்பொருள் பயிற்சியாளர் சசிகுமார், காலை 10:00 மணி, பைகஸ் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, சிறப்பு விருந்தினர்: கல்விசார் தலைவர் ரத்தினவேலு, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., அமைப்பு, கல்லுாரி சுகாதார நிலையம், காலை 11:45 மணி, லேடெக்ஸ் குறித்து பயிலரங்கம், சிறப்பு விருந்தினர்: தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியர் கோகிலாவாணி, ஏற்பாடு: கணிதவியல் துறை, காலை 10:00 மணி.

பொது

* கனெக்ட் மதுரை - செயற்கை தொழில்நுட்ப பயன்பாடு குறித்த கருத்தரங்கம்: ஓட்டல் கோர்ட்யார்டு, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த், ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, காலை 9:30 மணி.

* தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் செந்திகுமார், சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மதன்ராஜா, ஏற்பாடு: மடீட்சியா, டான்ஸ்டியா, மாலை 6:00 மணி.

* சேம்பரின் புதுப்பிக்கப்பட்ட நடுவர் மன்ற அரங்கம் திறப்பு: தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ஜெகதீசன், திறந்து வைப்பவர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மாலை 6:30 மணி.

* தி மதுரை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம்: சொக்கநாதர் திருமண மண்டபம், தருமை ஆதீனம், வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: தலைவர் பழனிச்சாமி, சிறப்பு விருந்தினர்கள்: ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் மாநில துணைத் தலைவர் தாமோதரன், மாவட்ட கருவூல அலுவலர் புனிதாராணி, காலை 10:00 மணி.

* பொதுக்குழு கூட்டம்: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், சாலை பிள்ளையார் கோயில் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் தினேஷ், ஒருங்கிணைப்பு: பொதுச் செயலாளர் குமரேஷ் பாபு, காலை 10:00 மணி.

* எஸ்.பி.பி., நினைவஞ்சலி: மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, காலை 9:00 மணி.

விளையாட்டு

* முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, அரசு ஊழியர்களுக்கான (ஆண்கள்) இறகுபந்து போட்டி, ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.

மருத்துவம்

* இலவச நுரையீரல் மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, தெற்கு வாசல், மதுரை, மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி

* தீபாவளி எக்ஸ்போ: எம்.பி.மகால், கருப்பாயூரணி, மதுரை, ஏற்பாடு: காஞ்சிபுரம் சில்க் மந்திர், காலை 10:00 முதல் இரவு 7:30 மணி வரை.

* கேரளா பர்னிச்சரின் சோபாக்கள், பெட்ரூம் செட் உள்ளிட்ட பர்னிச்சர் விற்பனை, கண்காட்சி: அண்ணாமலை கிராண்ட் பிருந்தாவனம் மஹால், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஆல்பா பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

* ஹஸ்டகலா வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி, ஆடைகள் கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மான்யா ஆர்ட் அண்ட் கிராப்ட், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us