/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிட்டி ஸ்போர்ட்ஸ்: மதுரைக்கு தங்கப்பதக்கம்
/
சிட்டி ஸ்போர்ட்ஸ்: மதுரைக்கு தங்கப்பதக்கம்
ADDED : அக் 13, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மலேசியாவில் பத்தாவது சர்வதேச டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி நடந்தது. இலங்கை, பாகிஸ்தான், பூடான், பிலிப்பைன்ஸ், ஜப்பான், மங்கோலியா உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 50 வீரர்கள் பங்கேற்றனர்.
மதுரை அரபிந்தோ மீரா குளோபல் பள்ளி மாணவர் லட்சுமிநாராயணன் எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் பங்கேற்றார். 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தலைமை பயிற்சியாளர் சுந்தர், அகாடமி செயலாளர் பாலகிருஷ்ணன் பாராட்டினர்.