ADDED : ஜூலை 03, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சாக்கு வியாபாரிகள் சங்கத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நடந்தது.
தலைவர் சிவபாலன் தலைமை வகித்தார் கதிரேசன் செயலாளர் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக பூமிநாதன் எம்.எல்.ஏ., தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பங்கேற்றனர். தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, கவுன்சிலர் அபுதாகீர் வாழ்த்தி பேசினர். மீண்டும் தலைவராக சிவபாலன், செயலாளராக கதிரேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளர் ஜெயபாண்டியன் நன்றி கூறினார்.