தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வித்யாபாலனுக்கு பறக்கும் ‛குட் மார்னிங்’ கமென்ட்

வித்யாபாலனுக்கு பறக்கும் ‛குட் மார்னிங்’ கமென்ட்

வித்யாபாலனுக்கு பறக்கும் ‛குட் மார்னிங்’ கமென்ட்


ADDED : அக் 20, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 06:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‛ஜெயிலர் 2’ படம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வில்லியாக வித்யாபாலன் நடித்தார். இவருக்கும், ரஜினிக்குமான உரையாடல் சுவாரஸ்யமானது. குறிப்பாக ‛‛நான் குட் மார்னிங், குட் ஈவினிங் மெசேஜ் அனுப்பினேன். ரிப்ளை இல்லை’’ என வித்யாபாலனிடம் ரஜினி கேட்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த எபெக்ட்டால் வித்யாபாலன் இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோவுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான கமென்ட்டுகள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் ‘ஜெயிலர் 2’வில் வரும் ‘குட் மார்னிங்’ வசனத்தை அள்ளி தெளித்திருக்கிறார்கள்.

பிரேசிலில் ‘வாரணாசி’ அப்டேட் தந்த ராஜமவுலி

மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் நடிப்பில் ‛வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரேசிலில் நடந்த லியோன் விருது விழாவில் பேசிய இவர், “அப்பா ,மகன் இடையிலான பாசம், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு ஆகியவை ‘வாரணாசி’ படத்தின் முக்கியமான எமோஷனலாக இருக்கும். ஆறேழு படங்களை ஒன்றாக இணைத்தது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இரு ஆண்டுகள் கடும் சவாலாக இருந்தன’’ என்கிறார் ராஜமவுலி.

பாரம்பரிய திருவிழாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

நட்சத்திர இளம் தம்பதியரான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி ஐதராபாதில் நடந்த பாரம்பரிய திருவிழாவான ‘சத்துல பதுக்கம்மா’ நிகழ்வில் பங்கேற்று நடனமாடினர். இதில் பேசிய ராஷ்மிகா ‛‛உங்களுடன் நடனமாடவே இங்கு வந்தேன். திருமணத்திற்கு பிறகு நாங்கள் கொண்டாடும் முதல் பதுக்கம்மா பண்டிகை இது. எங்கள் வீட்டில் என் அத்தை மற்றும் குடும்பத்தினர் பதுக்கம்மா நடனம் ஆடுவார்கள். எனக்கு ஓரளவுதான் தெரியும். இன்று, தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ மருமகளாக இந்த கொண்டாட்டத்திற்கு வந்துள்ளேன்” என்றார்.

சின்ன சின்ன குறைகளை கண்டுக்காதீங்க : யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் ராமாயணா. நவ., 5ல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியாகிறது. ஐதராபாதில் பேசிய யஷ், தயவுசெய்து படத்தில் சிறிய குறைகளை தேடாதீர்கள். விஎப்எக்ஸ் போன்ற காட்சிகளில் உள்ள பிழைகளை பெரிதுபடுத்த வேண்டாம். இது போன்றதொரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. நிதேஷ் திவாரி போன்ற ஒரு கலைஞர் சினிமாவை விட்டு போனால் நாம் மீண்டும் பின்னோக்கிச் சென்றுவிடுவோம். எனவே, ஒரு திறந்த மனதுடன் இந்த படத்தைப் பார்ப்போம்’’ என்றார்.

‘லோன் வாங்கி, கார் வாங்காதீங்க’

கண்ணன் சாவித்திரி தயாரித்து, இயக்கியுள்ள படம் பண்டமாற்று. இப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நடிகர் அப்புக்குட்டி, இந்த படத்தின் கதை வட்டிக்கு பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது, அதனால் வரும் பிரச்னைகளை சொல்கிறது. நானும் எனது காரை அடமானம் வைத்து, அவதிப்பட்டேன். எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் இல்லை. 10 சதவீதம் தான் வசதியாக இருக்கிறார்கள். எனது அனுபவத்தில் சொல்கிறேன் .லோன் வாங்கி கார் வாங்காதீங்க. ஒரு மாதம் வருமானம் வரும். பல மாதங்கள் வருமானம் வராது. மாட்டிக்குவீங்க என்றார்.

‛புதுப்பேட்டை 2’ கதையை

திருத்தும் செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் அவரது தம்பி, நடிகர் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் நடிப்பில் 2006ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛புதுப்பேட்டை’. இதன் இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே செல்வராகவன் அறிவித்து இருந்தார். இந்தாண்டு மார்ச்சில் படத்திற்கான ஒட்டுமொத்த திரைக்கதை பணியும் முடிந்ததாக அறிவித்தார். ஆனால் தனுஷின் ‘கால்ஷீட் ’கிடைக்காததால் இன்னும் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் ‘புதுப்பேட்டை 2 ’படக்கதையை திருத்தம் செய்து மெருகேற்றுவதாக செல்வராகன் தற்போது பதிவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us