
மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. அதிகளவாக இடையபட்டியில் 77 மி.மீ., மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 7: 30 மணிக்கு காற்றுடன் தொடங்கிய மழை, பின்னர் இடி, மின்னலுடனும் கொட்டித் தீர்த்தது. மாவட்ட அளவில் எல்லா பகுதியிலும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழையளவு (மி.மீ.,யில்) விவரம்
மதுரை வடக்கு 18.6, தல்லாகுளம் 22, பெரியபட்டி 34.2, விரகனுார் 16.4, சிட்டம்பட்டி 19.2, கள்ளந்திரி 62.4, இடையபட்டி 77, தனியாமங்கலம் 13, மேலுார் 14, புலிப்பட்டி 15.4, வாடிப்பட்டி 15, சோழவந்தான் 5, சாத்தையாறு அணை 4.2, மேட்டுப்பட்டி 48.2, ஆண்டிப்பட்டி 18.2, விமான நிலையம் 48.2, திருமங்கலம் 5.2, பேரையூர் 13.6, எழுமலை 0.6, கள்ளிக்குடி 11.6.
அணைகளில் நீர்மட்டம்
பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.3 அடி (மொத்த உயரம் 152 அடி). அணையின் நீர் இருப்பு 3084 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 1378 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 456 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 59.12. (மொத்த உயரம் 71 அடி).
அணையில் 3442 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2150 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 969 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 21.4 அடி (மொத்த உயரம் 29 அடி). அணையில் நீர் இருப்பு 39.96 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.