சோழவந்தான் : சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் அரசு பஸ்சை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
இங்கிருந்து பெரியார் நிலையத்திற்கு தினமும் காலை 8:15 மணிக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. முன்பு மதுரை டெப்போவில் இருந்து இயங்கி வந்தது. தற்போது சோழவந்தான் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது. ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் இப்பஸ்சை பயன்படுத்துகின்றனர்.
இந்த பஸ் தொடர்ந்து ஒரு வாரமாக 9:00 மணிக்கு தாமதமாக கிளம்புகிறது.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சரிசெய்யாமல் தாமதமாகவே இயக்கப்பட்டது.
நேற்றும் (ஆக. 11) வழக்கம் போல் தாமதமாக வந்தது. ஆத்திரமடைந்த கிராம மக்கள் பஸ்சை முற்றுகையிட்டு சிறைப்பிடித்தனர்.
காடுபட்டி எஸ்.ஐ., ரகு, சோழவந்தான் டெப்போ மேலாளர் முத்துகிருஷ்ணன் 'இனி பஸ் சரியான நேரத்திற்கு இயக்கப்படும்' என்று உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.