ADDED : ஆக 06, 2025 01:14 AM
மதுரை; மதுரை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., அரசு போக்குவரத்து கழக ஒர்க்கர்ஸ் யூனியன், ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்கம் சார்பில் 30 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்புதல், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மண்டல அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி அலாவுதீன் தலைமை வகித்தார்.
தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்கள் தனியார்மயப்படுத்தப்படுவதை கண்டித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 25 மாத பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளருக்கு வழங்கப்பட வேண்டிய டிஏ பாக்கியை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி மாநில துணை பொதுச் செயலாளர் நாராயண சிங் பேசினார். மண்டல தலைவர் ஷேக் அப்துல்லா, பொருளாளர் பாண்டியராஜன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் சப்பாணி, ஜீவானந்தம், ராமகிருஷ்ணன்,ஜெயபால், நாகராஜன் கலந்து கொண்டனர்.