/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருவூல கணக்குத் துறையுடன் 3 துறைகள் இணைப்பு; சீரழிப்பே அரசு ஊழியர்கள் சங்கம் கருத்து
/
கருவூல கணக்குத் துறையுடன் 3 துறைகள் இணைப்பு; சீரழிப்பே அரசு ஊழியர்கள் சங்கம் கருத்து
கருவூல கணக்குத் துறையுடன் 3 துறைகள் இணைப்பு; சீரழிப்பே அரசு ஊழியர்கள் சங்கம் கருத்து
கருவூல கணக்குத் துறையுடன் 3 துறைகள் இணைப்பு; சீரழிப்பே அரசு ஊழியர்கள் சங்கம் கருத்து
ADDED : நவ 18, 2024 06:21 AM
மதுரை: 'தமிழ்நாடு கருவூல கணக்குத் துறையுடன் 3 சீட்கள் இணைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுவது சீரழிப்பான நிலையை உருவாக்கும்' என, அரசு ஊழியர்கள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது:
தேவைகளின் அடிப்படையில் தனித்தனி இயக்குநரகங்களாக உருவாக்கி செயல்பட்ட ஓய்வூதிய இயக்குனரகம், அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறுசேமிப்பு இயக்குனரகம் ஆகிய துறைகளை தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறையுடன் இணைப்பது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் மேற்கண்ட 3 துறைகளின் இயக்குநர்கள் உள்பட பல்வேறு பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் உள்பட அனைவருக்கும் கடும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது.
தமிழ்நாடு அரசு இம்முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும. தமிழகத்தில் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ள நிலையில், அவர்களது ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ஓய்வூதிய இயக்குனரகமே கையாள்கிறது. தனித்துறையாக செயல்பட்டதால் ஓய்வூதியர்களின் குறைகளை அறிய மாவட்டம் தோறும் குறை தீர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., இ கவர்னன்ஸ் உள்ளிட்ட இணைய வழி பணிகளை முன்னெடுக்க கட்டாயப்படுத்தப்படுவதால், கருவூலக் கணக்குத்துறை ஊழியர்கள் விழி பிதுங்கிய நிலையில், மேற்கண்ட மூன்று துறைகளின் பணிகளை கூடுதலாக, அந்த ஊழியர்களிடமே வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது ஏற்க இயலாதது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.