ADDED : டிச 28, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திருமங்கலம் வட்ட கிளை தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். துாத்துக்குடியில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
கிளைச் செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திரபாண்டி, மூர்த்தி, அசோக், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிர்வாகி பாலமுருகன் நன்றி கூறினார்.