ADDED : நவ 13, 2025 06:08 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு வழங்கியது போல மாநில அரசும் ஜூலை முதல் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிநேரத்திற்கு கூடுதலாக பணியாற்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். அரசுப் பணியாளர், சங்க பிரதிநிதிகளை அழைத்து கலெக்டர் தலைமையில் மாதம் ஒரு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். செயலாளர் முத்துராஜா முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் குமார் பேசினார். பேரூராட்சி பணியாளர் சங்க நிர்வாகி பிச்சைமுத்து, ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் செல்லப்பாண்டி, ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் முருகன், மாதர் தேசிய சம்மேளன மாநில தலைவர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

