UPDATED : அக் 13, 2026 07:22 PM
ADDED : அக் 13, 2026 06:48 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒன்பது தாலுகா அலுவலகங்களில் நேற்று அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகளை உடனே வெளியிட்டு, பழைய ஓய்வூதிய திட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சததுணவு ஊழியர் அனைவருக்கும் முறையான காலஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி நேற்று மதுரை மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ் தலைமை வகித்தார். சந்திரபோஸ் விளக்கி பேசினார். துணைத் தலைவர்கள் மனோகரன், சந்திரபாண்டி, சிவகுரும்பன், முத்துவேல் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நீதிராஜா நிறைவுரையாற்றினார். இணைச் செயலாளர்கள் பெரியகருப்பன், சுஜாதா, ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
