ADDED : அக் 22, 2026 07:42 PM
மதுரை: மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கண்ணன் துவக்கி வைத்து பேசினார். முன்னாள் துணைத் தலைவர் சோலையன், மாவட்ட செயலாளர் மாரி, நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், முனியசாமி, மாரியப்பன், பெரியதம்பி, மண்டல செயலாளர் வீரவேல்பாண்டியன், நெடுஞ்சாலை ஊர்தி ஓட்டுனர் சங்கதலைவர் வேல்முருகன், உள்பட பலர் பங்கேற்றனர்.
மருத்துவத்துறை
மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் சார்பில் நான்கு ஆண்டுகளாக இளநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் நீதிராஜா, பொருளாளர் நாகலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.
