UPDATED : அக் 23, 2026 05:02 AM
ADDED : அக் 22, 2026 07:08 PM

சோழவந்தான்: சோழவந்தான் -ஜெனகை நகரில் ரோடுகள் அமைக்காததால் அப்பகுதியினர் சகதிக்குள் தவியாய் தவிக்கின்றனர்.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். பல தெருக்களில் ரோடு அமைக்காமலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட ரோடுகள் சேதமடைந்தும் மண் ரோடாகவே உள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் பல தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மண் ரோடு சகதியாக மாறிவிட்டது. இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். தேங்கியுள்ள நீரில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகின்றன. பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
