/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிப்பறை கட்டியாச்சு அரசு நிதியும் வீணாச்சு
/
கழிப்பறை கட்டியாச்சு அரசு நிதியும் வீணாச்சு
ADDED : ஜூலை 27, 2025 04:16 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சிக்கு 2022--23ல் 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ.1.81 லட்சத்தில் மதுரை - திண்டுக்கல் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோடு பஸ் ஸ்டாப் அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கழிப்பறைக்கு மாற்றுத் திறனாளிகள் செல்லும் சிமென்ட் பாதை பகுதி சேதமடைந்துள்ளது. மற்றொரு கழிப்பறை புதர்மண்டிவிட்டது. இது போன்ற பயன்பாடற்ற கட்டடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறுகின்றன.
கட்டட வளாகப் பொருட்கள் சேதப்படுத்தப்படுவதுடன் திருடும் போகிறது. இவற்றை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

