தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'காலிப்பணியிடங்களுக்கு அரசாணை வேண்டும்'

 'காலிப்பணியிடங்களுக்கு அரசாணை வேண்டும்'

 'காலிப்பணியிடங்களுக்கு அரசாணை வேண்டும்'


ADDED : பிப் 22, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆண், பெண் செவிலியர் உதவியாளர் தரம் 2 க்கு மொத்தமாக 2500 பணியிடங்களை கணக்கிட்டு அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அனைத்து ஊழியர் சுகாதார பணியாளர் மற்றும் செவிலிய உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மருத்துவமனையின் ஒவ்வொரு சிகிச்சை பிரிவிலும் 3 ஷிப்ட்களுக்கான ஆண், பெண் செவிலிய உதவியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் நியமிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆண், பெண் செவிலியர் உதவியாளர் தரம் 2 க்கான 999 பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ தேர்வு பணியாளர்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு வழங்கியுள்ளது. இது சுகாதாரத்துறையின் கீழ் பொது சுகாதாரம் (டி.பி.எச்.,), மருத்துவ கல்வி இயக்ககம் (டி.எம்.இ.,) மருத்துவ சேவைகள் இயக்ககம் (டி.எம்.எஸ்.,), இந்திய ஆயுஷ் மருத்துவம், இ.எஸ்.ஐ., ஆகியவற்றுக்கு பொருந்துமா என்ற தகவலை வெளியிடவில்லை.

தற்போது மொத்தம் 2324 பணியிடங்கள் உள்ளன. 999 பணியிடங்களை நிரப்பிய பின் மீதமுள்ள 1325 பணியிடங்களையும் இ.எஸ்.ஐ., ஆயுஷ், பிற மருத்துவமனைகளுக்கான சேவையை கணக்கிட்டு மொத்தமாக 2500 பணியிடங்களை உருவாக்க புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us