நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மூவன் சிவல்பட்டியில் வெங்கல காளீஸ்வரர் கோயிலில் லிங்கப்பிரதிஷ்டையும், யோக விநாயகர், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டும் யாக சாலை பூஜை துவங்கியது. அதைதொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (பிப். 22) இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிறகு பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

