ADDED : டிச 12, 2025 06:22 AM
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆய்வறிக்கைகள், 34 வது தென் மண்டல அளவிலான அறிவியல் மாநாட்டில் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டது.
இப்போட்டிகளில் தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 682 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முதற்கட்டமாக மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இரண்டாம் கட்டமாக நான்கு மண்டலங்களாக நடந்த மண்டல மாநாட்டில் இருந்து 132 ஆய்வறிக்கைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.
கோவில்பட்டியில் நடந்த தென் மண்டல மாநாட்டில் வெற்றி பெற்று மாநில மாநாட்டில் பங்கேற்றதில் 30 ஆய்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அர்ச்சனா, ஸ்ரீதர்ஷினி ஆகியோரின் ஆய்வறிக்கைகள் சிறந்தவையாக தேர்வு பெற்றன. வெற்றிபெற்ற மாணவிகள், வழி காட்டிய ஆசிரியை கார்த்திகாவை தலைமையாசிரியர் மூ.சந்திரன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சரவணக்குமார், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் புனிதா பாராட்டினர்.

