நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தேசிய மனித உரிமைகள் இந்திய சமூகநீதி மன்றம் சார்பில் சர்வதேச மனித உரிமை தினம் மாநிலத் தலைவர் பிச்சைவேல் தலைமையில் நடந்தது. கரிமேடு இன்ஸ்பெக்டர் முகமது இடிரிஸ், தாசில்தார் முத்துப்பாண்டியன், தேசிய துணை தலைவர் கீதா முருகன், பொதுச் செயலாளர் முகமது பாரிஸ், செயலாளர் சீமா பேசினர். விளையாட்டில் சிறந்து விளங்கிய பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாநில நிர்வாகிகள் ராமன், செல்வகுமார், பழனிவேல், உமா மகேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் முருகேசபாண்டி, விவேகானந்தன், சாய் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.

