/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பதவி நீக்கத்திற்கு எதிராக உசிலம்பட்டி நகராட்சி தலைவர் வழக்கு
/
பதவி நீக்கத்திற்கு எதிராக உசிலம்பட்டி நகராட்சி தலைவர் வழக்கு
பதவி நீக்கத்திற்கு எதிராக உசிலம்பட்டி நகராட்சி தலைவர் வழக்கு
பதவி நீக்கத்திற்கு எதிராக உசிலம்பட்டி நகராட்சி தலைவர் வழக்கு
ADDED : டிச 12, 2025 06:29 AM
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்த அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்கில், 'தலைவர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியிடக்கூடாது,' என இடைக்கால உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
உசிலம்பட்டி நகராட்சி தலைவராக இருந்தவர் சகுந்தலா. இவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விதிகளுக்கு முரணாக செயல்பட்டு, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் நவ.7ல் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சகுந்தலா உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மீதான குற்றச் சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளேன். இதை சரியாக பரிசீலிக்காமல் பதவி நீக்கம் செய்தது சட்டவிரோதம். பாதிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட நபர் அல்லது அதிகாரியிடமிருந்து எவ்வித புகாரும் வரவில்லை. பதவி நீக்க உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் செல்வம் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தலைவர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியிடக்கூடாது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய ஜன.7 க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

