/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி
/
வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி
வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி
வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி
ADDED : நவ 13, 2025 06:09 AM
மதுரை: மதுரையில் நடந்த மாநில அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகளில் 45 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்கள் கல்வித்துறை ஏற்பாட்டில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 6 - 9ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய, வினாடிவினா, சிறார் திரைப்படம் மன்றங்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோர் வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு பெறுகின்றனர். இந்தாண்டுக்கான மன்றப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை, கோவை, திருச்சியில் மாநில போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி மதுரையில் நேற்று 8ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது. போட்டியில் 38 மாவட்டங்களை சேர்ந்த 670 மாணவர்கள் பங்கேற்றனர். சி.இ.ஓ., தயாளன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த கல்வி உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன் முன்னிலை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார், கார் மேகம், சிவக்குமார், கணேசன், ரகுபதி, பள்ளி துணை ஆய்வாளர்கள் இந்திரா, கண்ணன், ஜெயராம், ஆசிரியர் பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேராசிரியர்கள் 52 பேர் நடுவர்களாக இருந்தனர். சிறார், இலக்கியம், வினாடிவினா மன்றப் போட்டிகளில் தலா 15 வீதம் 45 மாணவர்கள் வெற்றி பெற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
எந்த வெளிநாட்டிற்கு செல்ல உள்ளனர் என்பது குறித்து கல்வித்துறை பின்னர் அறிவிக்கும்.

