/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள்
/
மாநில நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 29, 2025 03:51 AM

சோழவந்தான சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில நீச்சல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
மதுரை வருவாய் மாவட்ட அளவில் நடந்த நீச்சல் போட்டியில் 11ம் வகுப்பு மாணவன் தனபால் 100 மீ. 'பிரீ ஸ்டைல்' பிரிவில் முதலிடம், 10ம் வகுப்பு கேசவன் 2ம் இடம், 50 மீட்டர் 'பிரீ ஸ்டைல்' 12 ஆம் வகுப்பு விஜயராஜ் 2ம் இடம், 50 மீட்டர் 'பேக் ஸ்ட்ரோக்' 12ம் வகுப்பு சஞ்சய் பாண்டி 2ம் இடம், 200 மீட்டர் 'பட்டர்பிளை' பிரிவில் 12ம் வகுப்பு முத்துப்பாண்டி 2ம் இடம், 200 மீட்டர் 'பிரீ ஸ்டைல்' 10ம் வகுப்பு நிதிஷ் குமார் 2ம் இடம், 200 மீட்டர் 'பட்டர்பிளை' 9ம் வகுப்பு சத்யஜித்ரே 2ம் இடம், 50 மீட்டர் 'பிரஸ்ட்ஸ்ட்ரோக்' 12ம் வகுப்பு மாணவன் ஹரி பிரகாஷ் 3ம் இடம், 200 மீட்டர் பட்டர்பிளை 10ம் வகுப்பு மாணவன் முத்துகிருஷ்ணன் 3ம் இடம், 'பிரஸ்ட்ஸ்ட்ரோக்' பிரிவில் 12ம் வகுப்பு நாகேஸ்வரன் 3ம் இடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன், ஆசிரியர்கள் பெற்றோர் பாராட்டினர்.