/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரிவிலக்கு, சலுகை தொடர்ந்தால் ஜி.எஸ்.டி., எளிமையாக இருக்கும் வேளாண், அனைத்து தொழில் வர்த்தக சங்கம் கருத்து
/
வரிவிலக்கு, சலுகை தொடர்ந்தால் ஜி.எஸ்.டி., எளிமையாக இருக்கும் வேளாண், அனைத்து தொழில் வர்த்தக சங்கம் கருத்து
வரிவிலக்கு, சலுகை தொடர்ந்தால் ஜி.எஸ்.டி., எளிமையாக இருக்கும் வேளாண், அனைத்து தொழில் வர்த்தக சங்கம் கருத்து
வரிவிலக்கு, சலுகை தொடர்ந்தால் ஜி.எஸ்.டி., எளிமையாக இருக்கும் வேளாண், அனைத்து தொழில் வர்த்தக சங்கம் கருத்து
ADDED : ஆக 29, 2025 03:51 AM
மதுரை: 'ஜி.எஸ்.டி., வரிச்சட்ட அமலாக்கம் எளிமை, வெளிப்படையாக இருக்க, தற்போது அமலில் உள்ள வரிவிலக்கு, வரிசலுகைகள் தொடர வேண்டும்' என, வேளாண், அனைத்து தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்தினவேலு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி சுதந்திர நாள் விழாவில் ஜி.எஸ்.டி.,யில் தீபாவளி முதல் அமலாகும் சீர்திருத்தங்கள் இன்பஅதிர்ச்சியாக உள்ளது. 12 சதவீதம், 28 சதவீத வரிவிகிதங்களை ரத்து செய்து, 5 சதவீத, 18 சதவீத விகிதங்களே இருக்கும். 12 சதவீத வரியில் உள்ளவற்றில் 99 சதவீத பொருட்கள் 5 சதவீதத்துக்கு மாற்றப்படும்.
ஊறு விளைவிக்கும் பொருட்கள், அதிநவீன கார்கள் மட்டுமே 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீத வரிவிதிப்புக்கு மாற்றப்படும்.
மீதியுள்ள 28 சதவீத வரிக்குட்பட்ட பொருட்கள், 18 சதவீத வரியில் சேர்க்கப்படும் என்பது, ஜி.எஸ்.டி.,யை எளிமையான வரிமுறையாக மாற்றும்.
ஜி.எஸ்.டி., சீர்திருத்த கவுன்சில் கூட்டம் செப்.3, 4 ல் நடக்க உள்ளது. ஜி.எஸ்.டி., அமலாக்கத்தில் நிலவும் குழப்பம், வேதனைகள் இனியும் தொடரக் கூடாது. பொருட்களுக்கான வரிவீதத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். வரிச்சட்டத்தை கடைபிடிப்பதால் தொழில், வணிகத்துறையினருக்கான அபரிமித செலவு கணிசமாக குறைய வேண்டும்.
ஜி.எஸ்.டி., வரிச்சட்டம் எளிமை, வெளிப்படைத்தன்மையுடன் இருக்க ஆலோசனைகள்:
* தற்போது அமலில் உள்ள 'வரிவிலக்குகள், சலுகைகள்' தொடர வேண்டும். இதற்கு தகுதியுள்ள வேறு பொருட்களையும் எந்த நேரத்திலும் இதில் சேர்க்கலாம்.
* ஒவ்வொரு தலைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களுக்கும், வரிவிலக்கு, வரிச்சலுகை பெற்ற பொருள் தவிர, மற்ற அனைத்துக்கும் ஒரே வரிவீதமே இருக்க வேண்டும்.
* அவ்வாறு நிர்ணயிக்கும்போது அத்தியாவசியம் இல்லாத சில பொருட்களுக்கு 5 சதவீத வரிவிதிக்க நேரிட்டால், ஜி.எஸ்.டி., கவுன்சில் இதைப் பொருட்படுத்தக் கூடாது.
இதுவே பல நாடுகளில் உள்ளது போன்று, அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரிவீதம் என்ற இலக்கை நோக்கி நம்மை செல்ல வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.