/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் இன்னும் கிடைக்கல.. ஒதுக்கிய நிதியை இழக்கும் அபாயம்

ADDED : மார் 13, 2024 12:59 AM

மதுரை : மதுரையில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு மானியம் முழுமையாக கிடைக்காததால் அதை செலவிடாமலேயே அரசு திரும்ப பெற்றுக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் ரூ. 75 ஆயிரம், ரூ. 1 லட்சம் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம் பராமரிப்பு மானியம் ஜனவரியில் வழங்கப்படும். இதன் மூலம் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, கற்றல் உபகரணங்கள் வாங்குதல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பராமரிப்புகளுக்கு அத்தொகை செலவிடப்படும்.
ஆனால் 2023ம் ஆண்டிற்கான மானியம் இதுவரை பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. மார்ச் 31 க்குள் செலவிடவில்லையென்றால் அந்த நிதி திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும் அபாயம் உள்ளதாக தலைமையாசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: சில ஆண்டுகளாகவே இந்த மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படுகின்றன. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இரண்டு தவணைகளும் பிற மாவட்டங்களில் வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் இரண்டாவது தவணை இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான உத்தரவே இதுவரை மாவட்டத்திற்கு வரப்பெறவில்லை. கல்வி அதிகாரிகள் இதுகுறித்து கவனம் செலுத்தி மானியத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.