/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆதிதிராவிட பெண்களுக்கு நிலம் வாங்க அரசு மானியம்
/
ஆதிதிராவிட பெண்களுக்கு நிலம் வாங்க அரசு மானியம்
ADDED : நவ 05, 2025 12:31 AM
மதுரை: அரசு ஆதிதிராவிடர் பெண்களின் முன்னேற்றத்திற்காக நன்னிலம் மகளிர் நிலஉடைமைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் நிலம் இல்லாத ஆதிதிராவிடர் பிரிவு விவசாய பெண் தொழிலாளர்கள் பிற சமுதாயத்தினரிடம் நிலம் வாங்க அரசு உதவுகிறது. நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படும். ஐ.ஓ.பி., வங்கியில் கடனுதவியும் உண்டு.
இத்திட்டத்தில் நிலத்தை பதிவு செய்ய முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் விலக்கும் அளிக்கப்படுகிறது. நிலத்தை பத்து ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தில் 2024 - 25 ல் 11 பேரும், 2025- 26 ல் இதுவரை 7 பேரும் பயன் பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தில் பயன்பெற்ற சோழவந்தான் சாந்தி கூறுகையில், ''தென்கரை பகுதியில் நிலம் வாங்கி இலவசமாக பதிவு செய்தேன். என் பெயரில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. தோட்டக்கலைத்துறை வழிகாட்டுதல்படி வாழை பயிரிட்டுள்ளேன். வேளாண் விற்பனை வணிகதுறை மூலம் வாழை மதிப்பு கூட்டுதலுக்கு ஆலோசனை பெற்று வருகிறேன். இதனால் நம்பிக்கை பிறந்துள்ளது'' என்றார்.

