தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே...மதுரை

ஒரு போன் போதுமே...மதுரை

ஒரு போன் போதுமே...மதுரை


ADDED : நவ 05, 2025 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொசுத்தொல்லை தாங்கலை

மதுரை எல்லீஸ்நகர் சாலை முத்து நகர் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குடியிருப்போர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சியும் கொசு மருந்து தெளிப்பதில்லை. அப்படி தெளித்தாலும் அதற்கு கொசுக்கள் மயங்குவதில்லை.

- எஸ். சுபா, எல்லீஸ்நகர்.

சாக்கடை பிரச்னை

மதுரை முத்துப்பட்டி யோக விநாயகர் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் அடிக்கடி சாக்கடை நீர் வெளியேறுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வீரராகவன், முத்துப்பட்டி

குடிநீரில் கழிவு

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோயில் தெருவில் குடிநீர் கழிவுநீர் கலந்து வருகிறது. பலமுறை புகாரளித்தும் பயனில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சங்கரன், பசும்பொன் நகர்.

ஆக்கிரமிப்பு அட்டகாசம்

நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது. பயணிகளுக்கு தொந்தரவாக பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கங்கா, கீழக்குயில்குடி.

சுகாதாரக் கேடு

மதுரை காமராஜர் ரோடு இங்கிலீஷ் கிளப் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் சுகாதார கேட்டிற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகசுப்பிரமணியன், காமராஜர் ரோடு.

தேங்கும் நீர்

மதுரை முடக்குசாலை காந்தி தெருவில் புதியதாக சிமென்ட் ரோடு அமைத்தாலும், மழை நீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களின் உடல்நலம் கேள்விக்குறியாகிறது. நோய் பரவுவதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

- பகவதி, முடக்குசாலை.

தரப்படாத குடிநீர் இணைப்புகள்

மதுரை பெத்தானியாபுரம் பவர்லைன் 2 வது குறுக்குத்தெருவில் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் இணைப்புகள் இன்னும் தரப்படவில்லை. காலம்தாழ்த்தாமல் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பத்மா, பெத்தானியாபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us