/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது' கவர்னர் ரவி பேட்டி
/
'முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது' கவர்னர் ரவி பேட்டி
'முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது' கவர்னர் ரவி பேட்டி
'முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது' கவர்னர் ரவி பேட்டி
ADDED : ஜூன் 22, 2025 03:44 AM

மதுரை:''மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது'', என கவர்னர்ரவி தெரிவித்தார்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சியில் கவர்னர் ரவி நேற்று வழிபட்டார். ஹிந்து முன்னணி சார்பில் அவருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. அருட்காட்சியில்திருப்பரங்குன்றம் முருகன் சன்னதிக்கு சென்ற கவர்னர், பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து அனைத்து படை வீடுகளுக்கும் சென்று வழிபட்டார்.பின்னர், அருட்காட்சியை காண காத்திருந்த பக்தர்களிடம் நலம் விசாரித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
கடவுள் முருகன் தமிழ் மக்களின் அடையாளம். அதுபோல் கடவுள் சிவன் உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களின் கடவுளாக விளங்குவதால்'தென்னாட்டுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என அழைக்கிறோம். சிவனின் குழந்தை முருகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். முருகனின் அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதை ஏற்பாடு செய்த ஹிந்து முன்னணிக்கு நன்றி. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
நம் கலாசார அடையாளத்தை தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஹிமாலய யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே இடத்தில் நான்கு புனித யாத்திரை தலங்களை தரிசனம் செய்ய முடியும்.அதுபோல், தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் அமைத்ததன் மூலம் முருக பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது என்றார்.