/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

ADDED : அக் 19, 2024 05:24 AM
மதுரை : ''தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வை, தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும்'' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல, தமிழக அரசும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.
பண்டிகை காலம் என்பதால் 1.7.2024 முதல் நிலுவைத் தொகையை இந்த மாதத்திலேயே தீபாவளிக்கு முன்ரொக்கமாக வழங்க வேண்டும்.
கடந்த ஜனவரிக்கான அகவிலைப்படி அறிவித்தபோது, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒருமாத காலம் தாமதமானது.
இதைத் தவிர்க்க உடனே அந்த மென்பொருளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க கருவூலத் துறையை முதல்வர் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.