நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : தெற்கு தெரு வைகை பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி துணைத் தலைவர் சிங்காரவேலர் தலைமை வகித்தார். முதல்வர் சிவரஞ்சனி ஆண்டறிக்கை வாசித்தார். இஸ்ரோ மூத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதல்வர் சந்திரன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். எலக்ட்ரானிக்ஸ், தொடர்பியல் துறை மாணவி மதுமிதா அண்ணா பல்கலையில் 17வது இடம் பெற்றதற்காக கேடயம் வழங்கப்பட்டது. அனைத்து துறையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.