
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் 59வது பட்டமளிப்பு விழா தலைவர் நாராயணன் தலைமையில் நடந்தது.
இஸ்ரோ முன்னாள் திட்ட துணை இயக்குனர் வெங்கட்ராமன், 463 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், ''இந்தியா வல்லரசாக உள்ளது. காரணம் படித்த இளைஞர்களை அதிகளவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்தியாவை உலக நாடுகள் பொறாமையுடன் பார்க்கின்றன.
முன்பு போர் நடந்தால் பல உயிரிழப்புகள் ஏற்படும். இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எதிரி இருக்கும் இடத்திலேயே இலக்குகளை தாக்கும் வல்லமை ஏற்பட்டுள்ளது'' என்றார். முதல்வர் சந்திரன், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.