/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிரானைட் வழக்கு: அன்சுல் மிஸ்ரா ஆஜர்
/
கிரானைட் வழக்கு: அன்சுல் மிஸ்ரா ஆஜர்
ADDED : செப் 10, 2025 01:41 AM

மதுரை : மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் பகுதியில் கிரானைட் குவாரி விதிமீறல் தொடர்பாக 2012 மற்றும் 2013 ல் வழக்குகள் பதியப்பட்டது. கனிமவள குற்ற வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அப்போதைய கலெக்டர் சகாயம் ,அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். 2012-13 ல் மதுரை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா (தற்போது டில்லி எய்ம்ஸ் கூடுதல் இயக்குனர்)மற்றொரு அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
நேற்று அந்நீதிமன்றத்தில் நீதிபதி ரோகிணி விசாரித்தார்.
அரசு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரானார். அன்சுல் மிஸ்ரா ஆஜராகி, விதிமீறல் கிரானைட் குவாரிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து சாட்சியம் அளித்தார். அவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடந்தது.
நீதிபதி விசாரணையை செப்.29 க்கு ஒத்திவைத்து, வேறு சில சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.