/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சி.என்.ஜி., அரசு பஸ்களுக்கு 'கிரீன்' சிக்னல்: மதுரையில் டீசல் பஸ்களை மாற்றி அமைக்க திட்டம்

ADDED : மார் 05, 2025 05:47 AM

மதுரை: மதுரையில் விரைவில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் சி.என்.ஜி., (கம்ப்ரைஸ்டு நேச்சுரல் காஸ்) பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
டில்லி, லக்னோவில் காற்றில் மாசு கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு போய்விட்டது. தமிழகத்திலும் வாகன பெருக்கம், தொழிற்சாலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றில் மாசு அதிகரித்துள்ளது.
அதேசமயம் நெல்லையில் மாசு மிகவும் குறைவாக உள்ளது. மதுரையில் காற்றில் மாசின் அளவு 'மாடரேட்' என்ற கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவில் உள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனங்களை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக 7 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் மாவட்டத்திற்கு தலா 2 சி.என்.ஜி., பஸ்கள் வழங்கப்பட்டு, இயக்கப்படுகின்றன. இவ்வகையில் 3 பஸ்கள் ஓடுகின்றன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஆயிரம் சி.என்.ஜி., பஸ்களை இயக்க அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக டீசலில் ஓடும் பஸ்களை கொஞ்சம் கொஞ்சமாக சி.என்.ஜி., பஸ்களாக மாற்ற உள்ளனர்.
இதற்காக பஸ்களில் தலா ரூ.7 லட்சம் மதிப்புள்ள கருவி பொருத்தப்பட உள்ளது. இதில் டீசல் டேங்கை மாற்றிவிட்டு இயற்கை எரிவாயுவை நிரப்பி அதன் மூலம் பஸ்கள் இயக்கப்படும். இதில் கார்பன் வெளியீடு '0' சதவீதமாக இருக்கும் என்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு குறையும்.
அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''முதற்கட்டமாக மதுரை நகரில் இயக்கப்படும். படிப்படியாக மாவட்ட அளவில் அதிகரிக்கப்படும். டீசல் பஸ்கள் சி.என்.ஜி., பஸ்களாக மாற்றிய பின் அதிக கி.மீ., கிடைப்பதுடன் பயணமும் அதிர்வு இல்லாமல், சுகமாக இருக்கும். அடுத்த கட்டமாக 'சேசிஸ்' உட்பட சி.என்.ஜி., பஸ்களாகவே கொள்முதல் செய்யும் வாய்ப்புள்ளது'' என்றனர்.