ADDED : நவ 03, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மேலமாரட் வீதி மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் நவ. 5ல் பொதுமக்கள் குறைதீர் முகாம் காலை 10:00 மணிக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடக்கிறது.
இம்மண்டலத்திற்கு உட்பட்ட 50 - 52, 54 - 62, 67 - 70, 75 - 77 ஆகிய 19 வார்டுகளைச் சேர்ந்த மக்கள், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தொழில் வரி, தெருவிளக்கு உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கலாம். கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.