UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 5 அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் துணைமேயர் நாகராஜன் தலைமையில் நடந்தது.
முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, புதிய வரிகள் விதிப்பு, ரோடுகள், சுகாதாரம் வசதிகள் தொடர்பாக 173 மனுக்கள் பெறப்பட்டன. காலிமனை விரிவிதிப்பு மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிற மனுக்களுக்கு அடுத்த கூட்டத்திற்குள் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
உதவி வருவாய் அலுவலர் ஆனந்தம், உதவிசெயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளர் பாஸ்கரபாண்டியன், சுகாதார அலுவலர் திருமால் பங்கேற்றனர்.
